சந்தனப் பேழையில் மூடுவதற்கு முன்பு ஜெயலலிதா உடலை பார்த்த பாதுகாப்பு அதிகாரி: கண்ணீர் பொங்க விடைகொடுத்தார்
ஜெயலலிதாவின் உடலை சந்தனப் பேழையில் வைத்து மூடுவதற்கு முன்பு ஓடி வந்து பார்த்த பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, கண்ணீர் பொங்க ஜெயலலிதாவுக்கு விடை கொடுத்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவரது வாகனத்தின் முன்பு ஒருவர் ஓடிக் கொண்டிருப்பார். முதல்வரை யாரும் நெருங்கி விடாமல் கவனமாக பார்த்துக் கொள்வார். முதல்வர் சொல்வதற்கு முன்பே அவரது சிந்தனை அறிந்து செயல்படுவார். இதனாலேயே ஜெயலலிதா அவரை ‘அப்பு’ என்று செல்லமாக அழைப்பார். அவர்தான் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஏடிஎஸ்பி பெருமாள்சாமி.