சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகள் சம்பளம் உயர்கிறது
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், மத்திய அரசுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், உச்சநீதிமன்றம் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்’ என, கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவைகள் சட்டத்தில், திருத்தம் செய்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், இதற்கான மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
உச்சநீதிமன்ற நீதிபதிக்கு, தற்போது, பிடித்தங்கள் போக, மாதம், 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.