வெளிநாட்டிலிருந்து டன், டன்னாக குப்பையை இறக்குமதி செய்கிறது ஸ்வீடன்.. ஏன் தெரியுமா?
குப்பை பற்றாக்குறை காரணமாக, ஸ்வீடன் வெளி நாடுகளிலிருந்து குப்பையை இறக்குமதி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் மின்சார உற்பத்தி பெருமளவுக்கு குப்பையிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. மின்சார உற்பத்தியில் பாதி இப்படித்தான் நிறைவேற்றப்படுகிறது.
ஸ்வீடன் நாட்டில், தனியார் நிறுவனங்கள் கழிவை எரித்தால் கூட அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க அரசுக்கு பங்கு செலுத்த வேண்டும் என்ற கொள்கை செயல்பாட்டில் உள்ளது. தேசிய ஹீட்டிங் நெட்வொர்க்கிற்கு அவை சேரும்.
உள்ளூர் குப்பைகளையெல்லாம் மறுசுழற்சி செய்து முடித்துவிட்டு, போதாதென்று இப்போது வெளிநாட்டிலிருந்து குப்பைகளை டன் டன்னாக கன்டெய்னர்களில் இறக்குமதி செய்து மின் உற்பத்தி செய்கிறார்கள் ஐரோப்பிய நாடான ஸ்வீடனில். இதை, ‘மறுசுழற்சி புரட்சி’ என்கிறது ஐரோப்பா.
ஸ்வீடனில் ஆண்டுதோறும் மக்களால் கொட்டப்படுகிற குப்பைகளில் 99 சதவிகிதக் குப்பைகள் மறுசுழற்சிக்கும் இன்னபிற ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கும் செல்கின்றன. 2011ல் வெறும் 97 சதவிகிதமாக இருந்த இந்த அளவை இப்போது 99 சதவிகிதமாக ஆக்கியிருக்கிறார்கள்.