2016ல் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் யார் தெரியுமா?
2016ம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பெயர்களை கூகுள் வெளியிட்டுள்ளது.
அதிகமாக தேடப்பட்ட டாப் 10 நபர்கள் இவர்கள்தான்:
அகில உலகிலும் அதிகம் தேடப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பை இந்தியர்கள் மட்டும் விட்டுவிடுவார்களா என்ன.. ஆம்.. Donald Trump அதிகம் தேடப்பட்ட தனி நபராகும்.
இதில் இரண்டாவது இடம் ஒலிம்பிக்கின் வெள்ளி மங்கை சிந்துவுக்கு. P.V. Sindhu என்ற வார்த்தை 2வது இடம் பிடித்துள்து. Sonam Guptaவுக்கு 3வது இடமும், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, Dipa Karmakar தீபாவுக்கு 4வது இடமும் கிடைத்துள்ளது. Disha Patani, Urvashi Rautela ஆகியோர் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களை பிடித்துள்ளனர்.
தொழிலதிபர் விஜய் மல்லையாவை அமலாக்கத்துறை மட்டுமல்ல, கூகுளிலும் மக்கள் வலைவீசி தேடியுள்ளனர். எனவே பட்டியலில் அவருக்கு 7வது இடம். பூஜா ஹெக்டேவுக்கு 8வது, ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு 9வது இடமும் கிடைத்துள்ளது. டைம்ஸ் நவ் சேனலின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ராஜினாமா செய்த Arnab Goswami 10வது இடத்தை பிடித்துள்ளார்.