‘ஆஸ்திரேலியா குடியரசு அந்தஸ்து பெற வேண்டும்’
ஆஸ்திரேலியாவின் தலைமை தற்போது இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் தான் உள்ளது. இது ஒரு கவுரவப் பதவிதான், நடைமுறையில் ஆஸ்திரேலிய பிரதமர் தான் நாட்டுக்கு தலைமை வகிப்பவர். இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்காம் டர்ன்புல், ‘ஆஸ்திரேலியா குடியரசு நாடாக வேண்டுமா?’ என்பது பற்றி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
1999-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இதே காரணத்துக்காக நடந்த மக்கள் வாக்கெடுப்புக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.