காஷ்மீரில் டிஜிட்டல் மயமான கிராமம்.. ரொக்கப் பணமின்றி பரிவர்த்தனை ஜோர்
காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஒரு கிராமம், முற்றிலுமாக ரொக்கப் பண பரிவர்த்தனை இல்லாத ‘கேஷ்லெஸ்’ ஊராக மாறி அசத்திக் காட்டியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் மத்திய பகுதியிலுள்ள புத்காம் மாவட்டத்திலுள்ள லனுரா கிராமத்தில்தான் பொதுமக்கள் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. எலக்ட்ரானிக் பேமென்ட் முறைக்கு, அந்த கிராமத்தை சேர்ந்த வீட்டுக்கு ஒருவராவது பழக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
கலவரங்களால் அடிக்கடி இணையதள இணைப்பு துண்டிக்கப்படும் காஷ்மீரில் ஒரு கிராமம் டிஜிட்டல் மயமாகியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு அரசு சார்பில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க, பரிவர்த்தனைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கி வருவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.