ரூ. 5க்கு டிபன்… ரூ.8க்கு சாப்பாடு.. அம்மா உணவக பாணியில் ராஜஸ்தான் அரசு!
தமிழகத்தைப் போல் குறைந்த விலை உணவு திட்டத்தை முதலமைச்சர் வசுந்தரா ராஜே தொடங்கி வைத்துள்ளார். அதன்படி டிபன் 5 ரூபாய்க்கும் முழுசாப்பாடு 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஏழைகளின் வாக்குகளை கவரும் வகையில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே குறைந்த விலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதன்படி டிபன் 5 ரூபாய்க்கும், முழு சாப்பாடு 8 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
இங்கு ராஜஸ்தானியர்கள் விரும்பி சாப்பிடும் பஜ்ரே கி கிச்சடி, பேசன்கட்டா, பூண்டு சட்னி ஆகியவை வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி பாரம்பரிய உணவான தால் பதி குருமா, பஜ்ரி கி ரொட்டி, மேக்கி கி கிச்சடி ஆகிய உணவுகளும் பரிமாறப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழைகள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தயாரிக்கப்படும் உணவுகள் வேன்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும் என டமுதலவர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.