புதிய தமிழக தலைமைச் செயலாளர் நியமனம்
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டின் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் இன்று பிறப்பித்துள்ளதாக தமிழக முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மேலும், நிர்வாக சீர்திருத்த ஆணையர் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், ராமமோகன ராவ் நீக்கப்பட்டதாக தகவல் இதுவரை வெளியாகவில்லை.
1.7.1959ஆம் ஆண்டு பிறந்த கிரிஜா வைத்தியநாதன், 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. இவர் நலவாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.