உள்ள நட்பு நீடித்து வருகிறது அது தொடர வேண்டும் ” ரனில் விக்ரமசிங்கே பேட்டி
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே திருப்பதி திருமலை கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று வந்தார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்த அவர், அங்கிருந்து விமானம் மூலமாக ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர், கார் மூலமாக திருப்பதிக்கு ரனில் விக்ரமசிங்கே வந்தார்.
இலங்கை பிரதமர் வருகையையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வு எடுத்த விக்ரமசிங்கே, பின்னர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கேயும் உடனிருந்தார்.
இன்று (வியாழக்கிழமை) காலை மீண்டும் சாமி தரிசனம் செய்தார் . அவருடன் திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் குழுத் தலைவர் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அதிகாரி டாக்டர் டி சாம்பசிவ ராவ் மற்றும் திருமலை தேவஸ்தான அதிகாரி கே.எஸ் சீனிவாச ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் முடித்து திரும்பிய பிரதமர் விக்ரம சிங்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா-இலங்கை இடையேயான உள்ள நட்பு நாளுக்கு நாள் தொடர்ந்து நீடித்து வருகிறது. அது தொடர்ந்து நீடிக்க வேண்டும். இலங்கை மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்தேன்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மழுப்பினார்.
அதனை தொடர்ந்து விக்ரமசிங்கே, அங்கிருந்து சென்னை வந்து விமானம் மூலமாக இலங்கை செல்கிறார்.