15 இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கிறித்துவ மத போதகர் மீது புகார்
இத்தாலியில் உள்ள வெனிட்டோ நகரில் உள்ள ஆண்ட்ரியா கண்டின் (வயது 48) என்பவர் கத்தோலிக்க பாதிரியாராக பொறுப்பு வகித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பாதிரியார் மீது இரண்டு பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர்.
அதில், பாதிரியார் ரகசியமாக விபச்சார தொழில் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும், அவருக்கு நன்கு பழக்கமான 15 இளம்பெண்களை அத்தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.
இக்குற்றச்சாட்டை தொடர்ந்து பாதிரியாரின் வீட்டை போலீசார் சோதனை செய்தபோது, வீட்டிற்குள் எடுக்கப்பட்ட ஆபாசப்படக்காட்சிகள் அடங்கிய சிடிகள் கிடைத்துள்ளன.
மேலும், போப் ஆண்டவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட ஒரு காகித பையில் ஆபாசமான புகைப்படங்களும் உள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், பாதிரியார் வீட்டில் உடலுறவின்போது பயன்படுத்தப்படும் அனைத்து விதமான பொருட்களும் இருந்துள்ளன.
இது குறித்து 49 வயதான பெண் ஒருவர் கூறுகையில் பாதிரியாருடன் எனக்கு ரகசிய தொடர்பு இருந்தது. ஆனால், அதற்கு பிறகு அவருக்கு எண்ணற்ற பெண்களுடன் தொடர்புள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
பாதிரியார் மீதான குற்றச்சாட்டிற்கு நகர மேயரான பாலோ டொனின் என்பவர் கூறுகைஅயில் பாதிரியார் மீதான குற்றங்களை மறைக்க பெரும் சதி நிகழ்ந்து வருகிறது.ஆனால், இவ்விவகாரம் தேசியளவில் பெரிதாகிவிட்டதால் அவர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது எனக் கூறியுள்ளார்.
பாதிரியாரை கைது செய்யவில்லை என்றாலும் அவர் மீதான குற்றங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.