ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்
திரை உலகிலும், அரசியலிலும் தனக்கென்று தனி பாணியை உருவாக்கி வெற்றி பெற்றவர் ஜெய லலிதா.
கடந்த மாதம் 5-ந்தேதி அவர் மறைந்தார். இது தமிழக மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.சினிமாவிலும், அரசியலி லும் சாதனை படைத்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தனிசிறப்பு கொண்டது. அது படமானால் நடிக்க விரும்புகிறேன் என்று ரம்யா கிருஷ்ணன் கூறி இருந்தார். இதையடுத்து ஜெயலலிதா வாழ்க்கை சினிமா படமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் முன் னாள் மத்திய மந்திரியும், தெலுங்கு பட உலகின் பிரபல டைரக்டரும், தயாரிப்பாளரும், தமிழ், தெலுங்கு கன்னட படங்களை இயக் கிய வருமான தாசரி நாரா யணராவ் ஜெயலலிதா வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ‘அம்மா’ என்று பெயர் சூட்டப்படுகிறது.
இதற்காக ‘அம்மா’ என்ற பெயரை அவர் பதிவு செய்து இருக்கிறார். இதை தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அவரே தெரிவித்து இருக்கிறார். இந்த படத்துக்கான கதை மற்றும் திரைக்கதை தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ரம்யாகிருஷ்ணன், திரிஷா, சிம்ரன், ஹேமமாலினி ஆகியோர் பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. எனவே இவர்களில் ஒருவர் இந்த வேடத்துக்கு தேர்வு செய்யப் படலாம் என்று கூறப்படு கிறது.
இந்த படத்தை தயாரிப்பது குறித்து தாசரி நாராயணராவ் கூறியதாவது:-
நடிகை என்ற முறையி லும், அரசியல் தலைவர் என்ற முறையிலும் ஜெயலலிதா எனக்கு நெருக்கமானவர். நான் 140 படங் களில் பலருடன் பணி புரிந்திருக்கிறேன். அவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர். இந்த படத்தை ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கையை வைத்து உருவாக்குவதா? அவர் அரசியலுக்கு மாறியதை வைத்து தயாரிப்பதா? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஜெயலலிதா தமிழில் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் நடித்து இருக்கிறார். அனைத்தும் வெற்றிப்படங்கள். என்.டி.ராமராவுடன் ஒரு டஜன் தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல அரசிய லிலும் சாதனை படைத்து இருக்கிறார்.
ஜெயலலிதா வாழ்க்கை பற்றிய படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும். இவ்வாறு தாசரி நாராயணராவ் கூறினார்.
இந்த படத்தில் கதாநாயகி யாக யார் நடிப்பார்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நடிகர்-நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டபிறகு, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
நன்றி : தினத்தந்தி