ஈரான் முன்னாள் அதிபர் மரணம்
கடந்த 1989–ம் ஆண்டு முதல் 1997 வரை 2 முறை அதிபராக இருந்தவர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி. 82 வயதான இவர் மாரடைப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு நேற்று அவர் மரணமடைந்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஈரானில் 1979–ல் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர்களில் முக்கியமானவராக விளங்கும் ரப்சஞ்சானி, நாட்டின் உள்துறை மந்திரி, பாராளுமன்ற தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார். ஈராக்குடனான போரின் போது இவர் ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினத்தந்தி