Breaking News
சாப்பாடு.. உடற்பயிற்சி.. கவர்ச்சி..

‘பேன்’ (விசிறி) என்ற இந்தி சினிமா மூலம் இந்திய திரை உலகிற்குள் பிரவேசித்திருக்கிறார், வலுஷா டிசவுசா. கோவாவை சேர்ந்த இந்த மாடலிங் அழகியை, ரசிகர்கள் ‘கோவா மல்கோவா’ என்று அழைக்கிறார்கள். அவரது உற்சாகமான உரையாடல்!

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் திருப்புமுனை?

பிரபலமான ஆடைவடிவமைப்பாளர் வான்டெல் ரோட்ரிக்ஸ்தான் என்னை அடையாளங்கண்டு திரை உலகிற்கு அறிமுகம் செய்தார். எனது 16 வயதில், கோவாவில் இந்த திருப்புமுனை ஏற்பட்டது.

பல முன்னணி டிசைனர்களின் விருப்பமான மாடலாக நீங்கள் மாறியது எப்படி?

அதை ஒரு பெரிய பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். எனது அழகும், திறமையும்தான் அதற்கு காரணம்.

மாடலிங், திரைப்பட நடிப்பு… இரண்டில் எது சிரமம்?

இரண்டிலும் அது அதற்கான கஷ்டங்களும், சவால்களும் உள்ளன. மாடலிங்கில் பொறுப்பு அதிகம். எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும். உடம்பை சீராகப் பராமரிக்கவேண்டும். அணியும் ஆடையும் நமக்கு உயிரோட்டம் தரவேண்டும். நடிகையாகவும் என்னை நினைத்துப்பார்க்கிறேன். நடிக்கும்போது நான் என்பதை மறந்து இன்னொரு பெண்ணாகிவிடுகிறேன். அதுவும் கூடுதல் பொறுப்பாகிவிடுகிறது.

‘பேன்’ படத்துக்குப் பதிலாக வேறு ஏதாவது படத்தில் அறிமுக மாகி இருக்கலாம் என்று நினைத்தது உண்டா?

என் வாழ்வின் சரியான தருணத்தில் ‘பேன்’ பட வாய்ப்பு கிடைத்தது. அறிமுகமான முதல் படத்திலேயே ஷாருக்கானுடன் நடித்தது அற்புதமான அனுபவம்.

உண்மையில் நீங்கள் யாருடைய ‘பேன்’?

நான் எனது 17 வயதில் ஷாருக்கானுடன் விளம்பரத்தில் நடித்தேன். அப்போது அவர் வேலையில் கொண்டிருக்கிற மரியாதையைக் கண்டு வியந்தேன். அப்போதே அவரது ரசிகை ஆகிவிட்டேன்.

ஷாருக்கானுடன் இணைந்து நடித்ததில் கற்றுக்கொண்டது?

அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். அவரிடம் உற்சாகம் நிரம்பி வழியும். அது என்னையும் தொற்றிக் கொள்ளும். களைப்பே இல்லாமல் தொடர்ந்து பல மணிநேரம் வேலை செய்யக்கூடியவர் அவர். ஷாருக் தனது வேலையை நேசிக்கிறார். அது அவரது உழைப்பில் வெளிப்படும்.

ஆடை, அணிகலன்களைப் பொறுத்தவரை உங்கள் விருப்பம் என்ன?

நாம் உடுத்துவதும், அணிவதும் நமக்கு சவுகரியமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். நான் கண்ணைப் பறிக்கிற மாதிரி எதையும் அணிய மாட்டேன்.

பே‌ஷனில் எந்தக் காலகட்டம் சிறந்ததாக இருந்ததாகக் கருதுகிறீர்கள்?

நான் அந்த அளவு பே‌ஷன் குறித்து அலசுபவள் அல்ல. எளிமையான ஜீன்ஸே எப்போதும் எனது விருப்பம்.

இந்தி திரையுலகில் எந்த நடிகையின் ‘டிரெஸ்சிங் சென்ஸ்’ உங்களை கவர்கிறது?

சோனம் கபூருக்கு எல்லா மாதிரியான உடைகளும் பொருந்துகின்றன. புதிதாக முயற்சித்துப் பார்ப்பதற்கு அவர் தயங்குவதும் இல்லை. ஆடைகள் தேர்ந்தெடுப்பதில் அவர் அறிவை பாராட்டலாம்.

மற்றவர்களிடம் நட்புகொள்ளும் வி‌ஷயத்தில் உங்கள் அம்மா உங்களுக்குக் கூறிய அறிவுரை?

அன்பு செலுத்துவது, நட்பு பாராட்டுவது போன்ற வி‌ஷயங்களில் மூளையை பயன்படுத்தி முடிவெடுக்கவேண்டும் என்றும், இதயத்தை பயன்படுத்தி உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்துவிடக்கூடாது என்றும் அம்மா கூறியிருக்கிறார். ஆனால் அம்மா சொன்ன இந்த அறிவுரைக்கு நான் மதிப்புகொடுப்பதே இல்லை.

எந்த மாதிரி ஆண் உங்களைக் கவர்வார்?

அழகாக, உயரமாக, வேடிக்கையாகப் பேசுபவராக இருக்கவேண்டும்.

உங்கள் உடல் கவர்ச்சியின் ரகசியம்?

இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுவதை விடச் சிறந்தது எதுவும் இல்லை. அத்துடன், தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மனஅழுத்தம் ஏற்படும்போது என்ன செய்வீர்கள்?

பிரச்சினைகளை நான் நேருக்கு நேர் எதிர்கொள்வேன். அதனால் பெரும்பாலும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகுவதில்லை.

‘டேட்டிங்’ தளத்தில் உங்களைப் பற்றி எந்த மாதிரி குறிப்புகளை இடுவீர்கள்?

அந்த மாதிரியான ஆள் நானல்ல.

உங்கள் வாழ்வை வழிநடத்தும் ‘விதி’?

‘நாளை என்ன நடக்கும் தெரியாது. இன்றே, இப்போதே வாழ்ந்திடு.’

பிடித்த நகரம்?

நியூயார்க்.

பிடித்த புத்தகம்?

டென்னிஸ் ஸ்டார் ஆந்திரே அகாசியின் ‘ஓபன்’.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.