இறந்தவர்களின் எலும்பில் சூப் வைத்து குடிக்கும் யானோமாமி மக்கள்
யாரேனும் இறந்துவிட்டால் அவர்களை புதைப்பது அல்லது எரிப்பது ஆகிய இரண்டு முறைகள் தான் உலகளவில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அப்படி, எரிக்கப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை இந்து மதத்தினர் ஆன்மீக அடிப்படையில் சில சடங்குகள் செய்து கடலில் கரைத்துவிடுவார்கள்.
ஆனால், பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் யானோமாமி என்ற இன மக்கள் பின்பற்றும் சடங்கு முறைகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவர்கள் தங்களது இன மக்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடலை எரித்துவிடுகிறார்கள்.
அதன்பின்னர் சாம்பல் மற்றும் எலும்பினை காய்கறிகள் போட்டு சூப் வைத்து குடிக்கிறார்கள். தங்களுடைய இனத்தையே சாப்பிடுவதை பராம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.
அதாவது, இவர்கள் இனத்தை பொறுத்தவரை மரணம் என்ற ஒன்று நிகழக்கூடாது, அப்படி நிகழ்ந்தாலும் அவர்கள் நம்முடன் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
எனவே, இறந்தவர்களின் சாம்பல் மற்றும் எலும்பில் சூப் வைத்து குடித்தால், அவர்கள் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை இம்மக்கள் நம்பி வருகின்றனர்.
எனவே, இந்த மக்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள்.
நன்றி : தினத்தந்தி