பட்ஜெட் தாக்கல் தேதி விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு, மத்திய அரசு பதில்
மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டை அடுத்த மாதம் 1–ந் தேதி தாக்கல் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது. அதே சமயம் 5 மாநில தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி தேர்தல் முடிவு மாற வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
இதையடுத்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக் தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தேர்தல் கமிஷனை சந்தித்து பட்ஜெட் தேதியை தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியது. இதற்கு மத்திய அரசு நேற்று பதில் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் பதில் எங்களுக்கு கிடைத்து உள்ளது. தேர்தல் கமிஷனர்கள் இது குறித்து உரிய முடிவு எடுப்பார்கள் என்றனர்.
நன்றி : தினத்தந்தி