ஏப்ரலில் சரக்கு – சேவை வரி மசோதா அமல்படுத்தப்படும் – ஜேட்லி
வருகின்ற ஏப்ரல் மாதத்தொடக்கத்தில் ஜிஎஸ்டி மசோதா என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா முறையாக அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதில் நீண்ட காலமாகவே இழுபறி நீடித்து வருகிறது. இந்த இழுபறியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் வரும் ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி மசோதா செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டம், இனி மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி மசோதா மூலம் இந்தியா முழுவதும் ஒரே சீரான சரக்கு – சேவை வரி வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : விகடன்