அவசர சட்டம் தான் ஜல்லிக்கட்டுக்கு ஒரே தீர்வு.. மார்க்கண்டேய கட்ஜூ அதிரடி
ஜல்லிக்கட்டுக்கு ஒரே தீர்வு அவசர சட்டம் இயற்றுவது தான் தீர்வாகும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை மத்திய அரசு காத்திருக்க வேண்டியது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் கடுமையாக நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் 2வது நாளாக விடிய விடிய அறவழியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் சென்னையோடு மட்டும் நின்றுவிடாமல் கடல் கடந்து அமெரிக்கா, லண்டன், மெல்போர்ன், சிங்கப்பூர், சீனா, ரஷ்யா உள்ளி்ட்ட உலக நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. .
இந்த நிலையில் த நியூஸ் மினிட் இணையதளத்திற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பேட்டியளித்துள்ளார். அதில் ‘ஜல்லிக்கட்டுக்கு ஒரே தீர்வு, அவசரச் சட்டம் இயற்றுவது தான்’ என்று கூறியுள்ளார்.
[Read This: வாவ் கட்ஜு.. இப்படி ஒரு ஜட்ஜு இல்லாம போயிட்டாரே சுப்ரீம் கோர்ட்டில்!]
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை, மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றது. அது தவறானது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே, அது குறித்து அவசரச் சட்டம் இயற்றப்பட்ட வரலாறு இருக்கிறது.
இப்போது ஜல்லிக்கட்டை கொண்டு வருவதற்கு ஒரே வழி பிரதமரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் அவசரச் சட்டத்துக்கு கையொப்பம் இடுவதே. நாடாளுமன்றத்தின் மூலம் ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டால் இருக்கும் அனைத்து உரிமைகளும் அவசரச் சட்டத்திற்கும் உண்டு.’ என்று கூறியுள்ளார்.