போரட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்.. சமூக விரோதிகளுக்கு இடம் தராதீர்கள்!- ரஜினிகாந்த்
மத்திய மாநில அரசுகள் மீது நம்பிக்கை வைத்து மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர் ஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் வரலாறு காணாத வகையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தின் இறுதி நாளான இன்று, திடீரென வன்முறை வெடித்தது.
மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அகற்றினர். பெண்கள், முதியவர்கள் என்று பார்க்காமல் தாக்க ஆரம்பித்தனர் போலீசார். இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. சென்னை முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக் கூடிய ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக திரண்ட மாணவ மாணவியர்களும் இளைஞர்களும் தாய்க்குலமும் அனைத்து தமிழ் மக்களும் நடத்திய, இதுவரை வரலாறு கண்டறியாத, அமைதியான, ஒழுக்கமான அறவழிப் போராட்டத்தை நடத்தி உலகிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பாராட்டைப் பெற்று வெற்றி மாலையணியும் இந்த நேரத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.
நன்றி : ஒன்இந்தியா.காம்