கமல்ஹாசன் கருத்து முட்டாள்தனமானது – சுப்பிரமணியன் சுவாமி ட்விட்!
போராட்டக்காரர்களை முதல்வர் சந்தித்து இருக்க வேண்டும் என்ற கமல்ஹாசனின் கருத்து முட்டாள்தனமானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், எம்.ஜி.ஆர். இப்போது நம்மிடம் இருந்திருந்தால் போராட்டக் களத்துக்கு வந்திருப்பார்.
போராட்டக் களத்தில் உள்ளே நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் பின்வாங்கியிருக்க மாட்டார். அவர்கள் எதிரே அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பார். அறவழியில் முடித்து வைத்திருப்பார். என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘தமிழக முதல்வர் போராட்டக்காரர்களை சந்தித்திருக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானது. மதுரையில் முதல்வர் முயற்சி செய்தார். என்ன நடந்தது?’ என்று தெரிவித்துள்ளார்.
நன்றி : ஒன்இந்தியா.காம்