Breaking News
திருமணத்திற்கு அசைவ விருந்து  லட்சகணக்கில் மொய்பணம் வசூலிப்பு!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் டெபுடி டைரக்டர் ஆக பணியாற்றுபவர் ஜானகிராமன். இவர் ஏற்கனவே நாகர்கோவில், அம்பத்தூர்,வேலூர் நகராட்சி,அலுவலகங்களில் நகரமைப்பு அலுவலராக பணியாற்றியவர். இவர் மகளுக்கு,சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுகாடு என்ற இடத்தில் புட்கோர்ட், என்ற
பன்ணை வீட்டில் சமீபத்தில் அதி விமர்சையாக திருமணத்தை நடத்தினார். கோடிக் கணக்கில் பணம் புரளும்,இவரது துறையில் 125 க்கு மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் வேலூர், சேலம், திருச்சி, ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் பணியாற்றும் நகரமைப்பு அலுவலர்கள், நகரைமைப்பு ஆய்வாளர்கள், ஆகியோரை அழைத்து, எனது மகளுக்கு டபுடலாக திருமணம் நடத்த உள்ளேன்.

திருமணத்தையொட்டி சிக்கன், மட்டன், எறா, சுறா, வஞ்சிரம், கோலா உருண்டை உள்ளிட்ட நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அயிட்டமும் கிடைக்கும். நீங்கள் எனக்கு செய்வதெல்லாம் ரொக்கமாகவும் தங்க நாணயங்களாகவும், விலையுர்ந்த பரிசு
பொருட்களாகவும் எனக்கு வழங்கினார். நான் சந்தோஷப்படுவேன் எனக் கூறுயிருந்தார்.இதையொட்டி அனைத்து அதிகாரிகளும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மஹாலில் ஜானகி ராமன் மகள் திருமணம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் ஆவடி நகரமைப்பு அலுவலர் மாறன், நகரமைப்பு ஆய்வாளர்கள் கணேசமூர்த்தி, சுகுமார்,செந்தில் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்பு, லட்சக்கணக்கில் ரொக்கம், தங்க நாணயங்கள், விலைமதிப்பற்ற பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன.இத்திருமணம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் திருமணம் என்ற பெயரில் ஜானாகிராமன் லட்ச கணக்கில் ரொக்கபணம், தங்க நாணயங்கள் வசூலித்தது அடாவடியான செயல், லஞ்ச ஒழிப்புதுறை இச்செயலை கண்காணிக்காமால் தூங்கி கொண்டிருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.

செய்திதொகுப்பு

விஜெய்ஈஸ்வர்பாண்டி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.