தேர்தல் போஸ்டரில் ஜனாதிபதி படம் கூடாது : தேர்தல் கமிஷன்
தேர்தல் பணிகளுக்காக கட்சி சார்பில் ஒட்டப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் படங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்., கட்சி கூட்ட பேனரில் ஜனாதிபதியின் படம் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் சாசனத்திற்கு எதிராக ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரது புகைப்படம் அல்லது பெயர்களை அரசியல் கட்சிகள் தங்களது சுய லாபத்திற்கு பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிவிப்பு அனைத்து கட்சியினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கும் அதன் நகல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்