அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
5 மாநில தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்தியில் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா அமெரிக்கா நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. பிரதமர் மோடி 3 முறை அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அதிபராக இருந்த ஒபாமாவை சந்தித்து இரு நாடுகள் இடையேலான உறவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒபாமாவும், கடந்த 2015ல் இந்திய குடியரசு தின விழாவின் போது சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். தற்போது அமெரிக்க புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அவர் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். இரு நாடு உறவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. டிரம்ப் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும்,5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்