அரசியலைமைப்பை சீர்குலைக்க முயல்வோரை எதிர்த்து போரிட வேண்டும்: சோனியா காந்தி வலியுறுத்தல்
நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
நாட்டின் 68-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சோனியா காந்தி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியக் குடியரசின் உள்ளார்ந்த வலிமை நமது அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. நாட்டின் உண்மையான மெய்ப்பொருள் மற்றும் அநீதி, சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் குறிக்கோளை பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமை ஆகும். இதை நாம் இந்த நாளில் நினைவுகூர வேண்டும்.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசிலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்தான் இந்த நாள்.
எனவே, இத்தகைய சிறப்புமிக்க அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பை சீர்குலைக்க முயல்வோரை எதிர்த்து ஒவ்வொரு இந்தியரும் கடுமையாக போராடுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ்