டுவென்டி-20′: இந்திய அணி தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி-20’ போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் பர்வேஸ் ரசூல் அறிமுகமானார். ரெய்னா, நெஹ்ரா, யுவேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் (8) ஏமாற்றினார். கேப்டன் விராத் கோஹ்லி 29 ரன்னில் அவுட்டானார். யுவராஜ் சிங் (12) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ரெய்னா (34) ஓரளவு கைகொடுத்தார். மணிஷ் பாண்டே (3) சொற்ப ரன்னில் அவுட்டானார். பாண்ட்யா (9), ரசூல் (5) ஏமாற்றினர். தோனி ஓரளவு கைகொடுத்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. தோனி (36) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 2 விக்கெட் வீழ்த்தினார்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (19), பில்லிங்ஸ் (22) நல்ல துவக்கம் தந்தனர். இங்கிலாந்து அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய கேப்டன் இயான் மார்கன் (51) அரைசதமடித்து கைகொடுத்தார். ஜோ ரூட் (46*) ஒத்துழைப்பு கொடுக்க, இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் யுவேந்திர சாகல் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின்மூலம் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.
நன்றி : தினமலர்