இந்தியாவின் ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிய டிரம்ப் நிர்வாகம் காரணமா?
குடிவரவு மூலம் திறமையான தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதில் இருந்து அமெரிக்க நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், முன்மொழியப்பட்டுள்ள அமெரிக்க சட்ட வரைவை அடுத்து, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிலவற்றின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

இத்தகைய நிறுவனங்கள் ஹெச்-1பி எனப்படும் சிறப்பு விசாவோடு வெளிநாட்டவரை பணியில் அமர்த்துவதை கஷ்டமாக்கும் வகையில், அத்தகையோருக்கு வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச ஊதியத்தை, இரண்டு மடங்காக அதிகரித்து இந்த மசோதா பரிந்துரைத்திருக்கிறது.
ஹெச்-1பி விசாவோடு ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் பணிபுரிய செல்வோரில் 80 சதவீதத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்களாவர். அதில் பலரும் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையில் பணிபுரிகின்றனர்.
அமெரிக்க தொழிலாளர்களை முதலில் பணியமர்த்தும் வகையில் நிறுவனங்கள் செயல்பட செய்வதற்கு, சிறப்பு விசாக்களுக்கான விதிமுறைகளை மாற்றுகின்ற செயலாணை ஒன்றையும் டிரம்ப் நிர்வாகம் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.