கேப்டனுக்கான தந்திரங்களை தோனியிடம் இருந்து கற்கிறேன்: மனம் திறக்கிறார் விராட் கோலி
குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய முடிவுகளை எடுக்க மகேந்திர சிங் தோனியின் மகத்தான அனுபவம் பயனுள் ளதாக இருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
டெஸ்ட் போட்டிகளுக்கு நான் கேப்டனாக பதவி வகித்து வந்தா லும், ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஆட்டங்கள் வேகமாக நகரக் கூடியவை. இதனால் தோனியிடம் இருந்து ஆலோசனைகள் பெறு கிறேன்.
இந்த வடிவிலான போட்டி களுக்கு அவர் நீண்டகாலம் கேப்ட னாக இருந்துள்ளார். ஆட்டத்தை நன்கு அறிந்துவைத்துள்ள தோனி யிடம் இக்கட்டான சூழ்நிலைகளில் ஆலோசனைகள் பெறுவது ஒன்றும் மோசமானது விஷயம் அல்ல.
யுவேந்திரா சாஹல் ஓவர் முடிவடைந்ததும் அடுத்ததாக ஹர்திக் பாண்டியாவை பந்து வீச செய்வது என நான் முடிவு செய்தேன். ஆனால் தோனியும், ஆசிஷ் நெஹ்ராவும் 19-வது ஓவர் வரை காத்திருக்க வேண்டாம். முதன்மை பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவோம் என ஆலோ சனை கூறினார்கள்.
இதன்பிறகே ஜஸ்பிரித் பும்ராவிடம் பந்தை வழங்கினோம். அவரும் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதுபோன்ற ஆலோசனைகள் குறுகிய வடிவிலான போட்டிகளில் புதிய கேப்டனாக செயல்படும் எனக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளது.
கேப்டன் பதவிக்கு நான் புதிதா னவன் இல்லை. ஆனால் குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு தலைமையேற்று வழிநடத்த, திறமைகளை புரிந்து கொண்டு செயல்படுவதில் சமநிலை இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தோனி முன்நின்று உதவிகள் செய்கிறார்.
இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் இருப்பதால் மிக வேகமான முன்னேற்றத்தை அடைந் துள்ளோம். நாங்கள் விரும்பும் முடிவை பெறமுடிகிறது. தரம் வாய்ந்த அணிக்கு எதிராக 3 வடிவிலான தொடர்களையும் வென்றது உண்மையிலேயே மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுத்துள் ளது.
எங்கள் அணிக்கு அதிக அனுபவம் இல்லாத நிலையிலும் 3 தொடர்களையும் வென்று உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளது சிறப்பான விஷயம். இதுஒரு அற்புதமான உணர்வு. டெஸ்ட் போட்டிக்கான அணி ஏறக்குறைய புதியது.
ஒருநாள் போட்டியில் 3 முதல் 4 அனுபவ வீரர்களை கொண்டி ருந்தோம். மற்ற வீரர்கள் அனை வரும் இளம் வீரர்களே. இது இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத் துள்ள மகத்தான உந்து சக்தி.
இளம் வீரர்கள் தங்களது தனிப் பட்ட திறன் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற பசியோடு இருக்கிறார்கள். பெங்களூருவில் நடைபெறும் போட்டிகளை பொறுத்தவரையில் பெரிய அளவில் இலக்கை நிர்ணயித்தாலும் மிடில் ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தாவிட்டால் வெற்றி பெறுவது என்பது கடினம்.
இந்த மைதானத்தில் எந்தவிதமான பேட்டிங் வரிசையும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாட முடியும். அந்த வகை யில் யுவேந்திரா சாஹல் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங் சரிவால், அந்த அணி வீரர்கள் அதிக அளவில் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறுவதில் பாதிப்பு இருக்குமா என்பது குறித்த கேள் விக்கு விராட் கோலி, “பேட்டிங் சரிவால், ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து வீரர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றே கருதுகிறேன்.
வீரர்களை ஏலத்தில் எடுப்பது என்பது அணி உரிமையாளர் களையே சார்ந்தது. தங்களது அணிக்கு எந்த வீரர் தேவை, யார் அணியை சமநிலையை அடையச் செய்வார்கள் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். ஏலத்தில் நிச்சயம் அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்’’ என்றார்.
இம்முறை அதிக அளவிலான இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்வார்கள் என ஏற்கெனவே அந்த அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே ஐபிஎல் 10-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் விரைவில் பெங்களூருவில் நடை பெற உள்ளது. 44 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 140 வீரர்களை 8 அணிகளின் உரிமை யாளர்கள் அப்படியே தக்க வைத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.