நான் பந்தாடப்படுகிறேன்; மல்லையா
லண்டன்: கடன் சர்ச்சையில் சிக்கி லண்டனில் வசிக்கும் விஜய் மல்லையா, தான் கால்பந்தாடப்படுவதாக கூறியுள்ளார்.
வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள விஜய் மல்லையா, தற்போது அவர் லண்டனில் வசித்து வருகின்றார். இந்நிலையில், வங்கியில் கடன் பெறுவதற்காக விஜய் மல்லையா, தனக்கு உள்ள முழு செல்வாக்கையும் பயன்படுத்தினார் என குற்றம்சாட்டியதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக டுவிட்டரில் விஜய் மல்லையா கூறுகையில், சி.பி.ஐ.,யின் குற்றச்சாட்டுகள் தனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அனைத்தும் தவறானவை. சிபிஐக்கு தொழில் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் தெரியுமா என்பது கருத வேண்டியுள்ளது. மீடியா கால்பந்தாட்ட மைதானமாக பயன்படுத்தப்பட்டு, அதில் நான் கால்பந்தாடப்படுகிறேன். இந்த மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேகமாக விளையாடுகின்றன. ஆனால், அங்கு நடுவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.