ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்- ஓ. பன்னீர் செல்வம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.பணியில் உள்ள நீதிபதி தலைமையில் ,விசாரணை நடத்தப்படும் என ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்றம் கூடும் போது எனக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பது தெரிய வரும். பாரதீய ஜனதா என்னை இயக்க வில்லை பாரதீய ஜனதா என்னை இயக்குவதாக கூறுவது வடிகட்டிய பொய். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கபடும்.பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும்.விசாரணை கமிஷன் அமைப்பது அரசின் கடமை. என்மீதான குற்றசாட்டுக்கு காலம் பதில் சொல்லும்.
கவர்னர் வித்யாசாகர் சென்னை வந்ததும் அவரை சந்திப்பேன்.பொதுமக்களை கிராமம் கிராமமாக வீடு வீடாக சென்று சந்திப்பென். விரைவில் அ.தி.மு.க நிரந்த பொதுசெயலாளருக்கான தேர்தல் நடக்கும்.ஜெயலலிதா அண்ணன் மகள் என்ற முறையில் தீபாவுக்கு மரியாதை கொடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி