50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மீண்டும் ஓ.பன்னீர்செல்வமே முதல்வராகும் வாய்ப்பு?
தற்போது முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு 50 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்து வருவதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி வருகிறது.
நேற்று அதிரடி திருப்பமாக ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம்., அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை.
தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்.மக்கள், தொண்டர்கள் விரும்பினால் நான் ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என்று கூறிய பன்னீர் செல்வம், என்னை அசிங்கப்படுத்தி விட்டனர் என்று கூறி கண் கலங்கினார். என்று அதிரடியாக கூறினார்.
இதையடுத்து அதிமுகவின் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.மேலும், ஸ்டாலினை பார்த்து பன்னீர் செல்வம் சிரித்ததாகவும், பன்னீர் செல்வத்தின் இந்த திடீர் புரட்சி பின்னணியில் எதிர்கட்சியான திமுக இருப்பதாகவும் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.ஸ்டாலினைப் பார்த்து நேரில் சிரித்தது குறித்து சசிகலா குற்றச்சாட்டு எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும்போது, மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் சிரிக்க முடியும். ஸ்டாலினைப் பார்த்து சிரிப்பது குற்றமாகாது.என கூறினார்.
தற்போது முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு 50 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்து வருவதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏவாக ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஓ பன்னீர்செல்வம் இல்லத்துக்கு கவுண்டம் பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுகுட்டி வருகை தந்துள்ளார். ஏற்கனவே, சோழவந்தான் எம்.எல்.ஏ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது. முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடி பேட்டியால், நேற்றிரவு அவருக்கு, தமிழகம் முழுவதும், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் தொலைபேசி வாயிலாகவும், ‘வாட்ஸ் – ஆப்’ போன்ற சமூக வலைதளங்களின் மூலமாகவும் ஆதரவு தெரிவித்தனர்.மைத்ரேயன் எம்.பி. ,அமைச்ச்சர்கள்,முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் போன்றவர்களும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும், முக்கிய நிர்வாகிகள் அனைவரும், தொடர்ந்து ஆதரவு அளிப்பர் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
பன்னீர் செல்வம் முதல்வராக நீடித்தால், நாங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்று ஏற்கனவே திமுக தெரிவித்து இருந்தது. கவர்னர் பெரும்பான்மையை நிரூபிக்க அழைத்தால் திமுக பலத்துடன் பன்னீர்செல்வம் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லை என்றால், கட்சியில் இருந்து மேலும் பிரிந்து வரும் அதிமுக எம்.எல்.ஏ.,க்களை வைத்து, திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம்.
நன்றி : தினத்தந்தி