அனல்பறக்கும் அதிமுக அரசியல்! – புதுச்சேரி அதிமுக நிர்வாகி நீக்கம்
அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அதிமுக கொள்கை- குறிக்கோள் களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட தாலும் கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங் கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத் தினாலும் புதுச்சேரியைச் சேர்ந்த நெல்லித்தோப்பு தொகுதி முன் னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் வியாழக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுகொள்கிறேன்.
நன்றி : தி இந்து தமிழ்