பன்னீர் செல்வம், சசிகலா மனுவில் இருந்தது என்ன?
பன்னீர்செல்வமும், சசிகலாவும் கவர்னருக்கு தனித்தனியே அளித்த மனுவில் உள்ள விவரங்கள் தெரியவந்துள்ளது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக பன்னீர்செல்வமும், சசிகலாவும் நேற்று(வியாழக்கிழமை) தனித்தனியாக கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அவரிடம் இருவரும் தனித்தனியாக மனுக்கள் கொடுத்தனர். மனுக்களில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்களாவது:
பன்னீர் செல்வத்தின் மனு:
* என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்துவிட்டனர்.
* அந்த ராஜினாமாவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்.
* முதல்வராக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது.
* கவர்னர் மாளிகையில் எம்.எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.
* சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்.
சசிகலா மனு:
* எனக்குத்தான் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்து உள்ளனர். அதற்காக கையெழுத்தும் போட்டு உள்ளனர்.
* முதல்வராக பதவி ஏற்க எனக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
* சட்டசபையில் எனக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது.
* நிரூபிக்க சொன்னால் அதை நான் நிரூபித்து காட்டுவேன்.
* எனவே அதற்கான முதல் வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நன்றி : தினமலர்