இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களை ஜாம்பவான்களாக மாற்றும்: ஆஸி. கேப்டன் ஸ்மித் நம்பிக்கை
விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் எல்லா நேரத்திலும் சிறந்த அணி என்ற பெருமையை அடைவோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் சிறப்பாக விளையாடினால் அது பெரிய புகழை சேர்க்கும். இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் எல்லா நேரத்திலும் சிறந்த அணி நாங்கள்தான் என்ற அந்தஸ்தை பெற முடியும்.
இந்திய தொடர் பெரிதுதான். எங்கள் வழியில் நாங்கள் விளை யாடினால் நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும். இந்த தொடரின் வெற்றி நிச்சயம் ஆசஷ் தொடருக்கு ஊக்கமாக அமையும்.
தொடர் சமனில் முடிந்தாலும் அது எங்களுக்கு சாதகமே. நாங்கள் போட்டியின் முடிவுகளை பற்றி சிந்திக்கவில்லை. எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத் துவதே நோக்கம். கற்ற பாடங்களை போட்டி திறனுடன் வெளிப்படுத்த வேண்டும். மற்றும் கடினமான சூழ்நிலைகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிந்து செயல்பட வேண்டும். இவற்றை நாங்கள் செயல்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் நாங்கள் வெற்றியை அடைவோம்.
ஆனால் உண்மையில், அதற்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன் பிறகே முடிவு களை பார்க்க முடியும். பொது வாகவே நான் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவேன். எப்படி செயல்பட வேண்டும், எந்த முறையில் செயல்படக்கூடாது என ஒரு திட்டத்தை நான் வகுத்துக்கொள்வேன்.
இலங்கை தொடரில் இருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன். மிகப் பெரிய அளவில் ரன் குவிப்பது என்பது மிகவும் முக்கியமானது. இந்திய பந்து வீச்சாளர்களின் யோச னையை கணக்கிட்டு அதற்கு தகுந்தபடி கால்நகர்வுகளை பயன் படுத்துவேன். ஆட்டத்தின் பல்வேறு தருணங்களுக்கு தகுந்தபடி நான் என்னை தகவமைத்துக் கொள் வேன். அப்போதுதான் வெற்றி தருணங்களை அடைய முடியும். இவ்வாறு ஸ்மித் கூறினார்.