சிக்கன் சிந்தாமணி
என்னென்ன தேவை?
சிக்கன் – ஒரு கிலோ
காய்ந்த மிளகாய் – 25
சின்ன வெங்காயம் – 200 கிராம்
நல்லெண்ணெய் – 150 கிராம்.
எப்படிச் செய்வது?
வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றிச் சூடானதும் சின்ன வெங்காயத்தை முழுதாகப் போட்டு வதக்குங்கள். காய்ந்த மிளகாயில் உள்ள விதைகளை எடுத்துவிட்டு, மிளகாயை மட்டும் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள். அதன் பின் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட கோழிக்கறியைப் போட்டு, வதக்குங்கள். பத்து நிமிடங்களில் கறி முழுமையாகத் திரண்டுவிடும். பிறகு கல் உப்பு சேர்த்து, கறி முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, மூடிவைத்து வேகவிடுங்கள். 10 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியைத் திறந்து கிளறிவிடுங்கள். சிறிது நேரத்தில் நீர் முழுவதும் வற்றி, மிளகாயின் காரம் முழுவதும் சிக்கன் துண்டுகளில் முழுமையாக பரவிவிடும். இறக்கிவைத்து, சிக்கன் சிந்தாமணியைச் சூடாகப் பரிமாறுங்கள்.