சிக்கன் லாலிபாப்
என்னென்ன தேவை?
சிக்கன் தொடைப்பகுதி – 4 துண்டுகள்
முட்டை – 1
எலுமிச்சை – பாதி பழம்
மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன்
கடலை மாவு – 3 டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
மைதா மாவு – அரை டீஸ்பூன்
சிவப்பு கலர் பவுடர் – 4 சிட்டிகை
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் அனைத்து மாவு வகைகளையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அதனுடன் மிளகாய்ப்பொடி, சிவப்பு கலர் பொடி ஆகியவற்றைக் கலந்துவையுங்கள். முட்டையை அதில் உடைத்து ஊற்றி, எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவைவிட கெட்டியான பதத்தில், கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
சிக்கன் துண்டுகளை லேசாகக் கீறி, கரைத்துவைத்துள்ள மசாலாவில் நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு, ஐந்து நிமிடம் மூடிவையுங்கள். குறைந்த தீயில் வேகவிடுங்கள். பிறகு முடியைத் திறந்து, மீண்டும் புரட்டிப் போட்டு எடுத்தால் மொறுமொறுப்பான சிக்கன் லாலிபாப் தயார்.