விதவிதமா தொடுகறி: வாழைக்காய் மசாலா பொடி தூவல்
என்னென்ன தேவை:
வாழைக்காய் – 1
வறுத்துப் பொடிக்க:
தனியா – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன்
கசகசா – அரை டீஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
காய்ந்த மிளகாய் – 6
தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது
வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனித்தனியே சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நறுக்கிய வாழைக்காயை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி முக்கால் பதத்தில் வேகவைத்து நீரை வடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். வேகவைத்த வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து, மசாலாப் பொடியைச் சேர்த்து நன்றாகப் புரட்டியெடுங்கள்.