உத்தரப் பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு
உத்தரப் பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள 67 தொகுதிகளில் இன்று மாலை 5 மணி உடன் பிரச்சாரம் ஓய்கிறது. புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற் கட்ட தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. 2வது கட்டமாக 67 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணி உடன் நிறைவு பெறுகிறது.
வாக்குப்பதிவுக்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 721 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக வேட்பாளரை ஆதரித்து பாதன் உள்ளிட்ட பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இதேபோல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது கட்டமாக வருகிற 19ம் தேதி 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
நன்றி : தினகரன்