பாக். செனட் தலைவருக்கு அமெரிக்கா விசா மறுப்பு
பாகிஸ்தான் செனட் சபை துணை தலைவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஐநாவின் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு இன்று தொடங்கி 2 நாட்கள் சர்வதேச நாடுகளின் செனட் சபை தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் செனட் சபையின் துணை தலைவர் மவுலானா அப்துல் கபூர் ஹைதரி பங்கேற்பதற்காக இருந்தது. இதற்காக மவுலானா விசா வேண்டி அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார். ஆனால் அவருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து விட்டது. இதனையடுத்து அவரின் பயணத்தை பாகிஸ்தான் செனட் தலைவர் ராசா ரப்பானி ரத்து செய்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் 7 முஸ்லிம் நாட்டவர்க்கு விசா வழங்குவதற்கு தடை விதித்தார். அதில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை. இருப்பினும், விரைவில் பாகிஸ்தானுக்கும் தடை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் செனட் துணை தலைவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது அதனை உறுதி செய்வது போல் உள்ளது.
நன்றி : தினகரன்