அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் கலிபோர்னியாவில் அணை உடையும் அபாயம்: 2 லட்சம் பேர் வெளியேற்றம்
அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் கலிபோர்னியா மாகாணத்தில் முக்கிய அணை உடைந்து விழும் அபாயத்தில் இருப்பதால், அதன் அருகே வசிக்கும் சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்புக்கான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிலிக்கான் வேலி என அழைக் கப்படும் அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணத்தில் ஐ.டி. துறையைச் சேர்ந்த இந்தியர் கள் ஏராளமானோர் வசித்து வரு கின்றனர். இந்த மாகாணத்தில் உள்ள ஓரோவில்லே ஏரியின் குறுக்கே 770 அடி உயரத்தில் ஒரோ வில்லே அணை கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே இந்த அணைதான் மிகவும் பெரியது. சுமார் 7,000 அடி அகலத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீர், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவில் மழை இல்லாத காரணத் தினால் அணையின் நீர்மட்டம் அதளபாதாளத்துக்கு சென் றிருந்தது.
இந்நிலையில் இந்த குளிர் காலத்தின்போது, வடக்கு கலி போர்னியாவில் எதிர்பாராதவித மாக கனமழை பெய்தது. இத னால் ஓரோவில்லே ஏரியும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இந்தச் சூழலில் அதிகப்படியான நீர்வரத்தால் ஏரியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ஓரோவில்லே அணையின் வடி கால்களில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அணையின் வலுவும் பாதித்தது. தற்போது எந்த நேரமும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓரோவில்லே அணை அருகே வசித்து வந்த சுமார் 2 லட்சம் பேரை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றும்படி கலிபோர்னியா மாகாண அரசு எச்சரித்தது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து விட்டு அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் வசிக் காக வடக்குப் பகுதியில் உள்ள சிக்கோ, கொலுசா ஆகிய பகுதி களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிக குடில்கள் அமைக் கப்பட்டுள்ளன. கலிபோர்னியா மாகாண ஆளுநர் ஜெர்ரி பிரவுனும் அவசரகால உத்தரவு பிறப்பித்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள உள்ளூர் மக்களுக்கு தேவையான உதவி களை வழங்கும்படி அதிகாரி களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ்