செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா மீண்டும் விண்கலம் அனுப்புகிறது
கடந்த 2013-ம் ஆண்டு, செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விண்கலம் அனுப்பியது. அது, வேறு நாடுகளின் துணை இல்லாமல், இந்தியா மட்டுமே மேற்கொண்ட முயற்சி ஆகும். இந்நிலையில், இரண்டாவது முறையாக, செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விண்கலம் அனுப்ப உள்ளது.
2021-2022-ம் நிதி ஆண்டில், இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தற்போதைய நிலையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் மாற்றம் இருக்கக்கூடும். இந்த பயணத்தின்போது, செவ்வாய் கிரகத்தில் ரோபோவை தரை இறக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில், பிரான்ஸ் நாட்டு விண்வெளி அமைப்பும் கைகோர்க்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுபோல், சூரிய குடும்பத்தின் இரண்டாவது கிரகமான வெள்ளி கிரகத்துக்கு முதல்முறையாக இந்தியா விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
நன்றி : தினத்தந்தி