சசிகலா கோரிக்கை: சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா, சரணடைய கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
வாய்மொழியாக…:
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நிலையை காரணம் கேட்டு, சரணடைய இரண்டு வார கால அவகாசம் கோரி சசிகலா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர்.
நிராகரிப்பு:
ஆனால், இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா கோரிக்கையை ஏற்க முடியாது. தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
நன்றி : தினமலர்