சசிகலா வழக்கில் தீர்ப்பும், அரங்கேறிய காட்சிகளும்…
சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, தமிழக அரசியலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. அதுபற்றிய விவரம் வருமாறு:-
* காலை 6 மணி: சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு, அண்ணாநகரில் உள்ள க.அன்பழகன் ஆகியோரின் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
* 9 மணி: செம்மலை எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்தார்.
* 10.30 மணி: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
* 10.45 மணி: கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை நடத்தினார்.
* 10.50 மணி: கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிரடிப்படை போலீசார் விரைந்தனர்.
* 11.35 மணி: 6 அரசு பஸ்கள் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு வந்தன.
* மதியம் 12.45 மணி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
* 12.55 மணி: அ.தி.மு.க. சட்டசபை கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
* 1 மணி: ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாகம்.
* 1.20 மணி:- நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து.
* 1.30 மணி:- கட்சியின் நலன் கருதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
* 1.40 மணி: அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவளித்தவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சசிகலா அறிவிப்பு.
* பிற்பகல் 2.30 மணி: கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களை பார்த்து பேசச் சென்ற அமைச்சர் க.பாண்டியராஜன் உள்ளிட்டவர்களின் கார்கள் கோவளத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன.
* 3.20 மணி: கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
* மாலை 5.30 மணி: எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அப்போது ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு எடப்பாடி பழனிசாமி உரிமை கோரினார்.
* 6.25 மணி: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் கவர்னரை சந்தித்து பேசினார்கள்.
* இரவு 9.25 மணி: ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீபா ஆதரவு தெரிவித்தார்.
* 9.30 மணி: கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து சசிகலா புறப்பட்டார்.
* 10 மணி: கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு தீபா சென்றார். ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நன்றி : தினத்தந்தி