கொல்லைப்புறமாக வந்து திமுக ஆட்சி அமைக்காது: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரும் கொள்கை திமுகவுக்கு இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையத் தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலை அனைவருக்கும் தெரி யும். பன்னீர்செல்வத்தையா, எடப் பாடி பழனிச்சாமியையா, அல்லது எதிர்க்கட்சியான திமுகவையா, யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கப் போகிறார் என ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரும் கொள்கை திமுகவுக்கு இல்லை. மக்களைச் சந்தித்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, மக்களுக்கான ஆட்சியை நடத்துவதுதான் திமுக வின் கொள்கை.
சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்காக அதிமுகவினர் திட்டமிட்டதால் தமிழக அரசி யலில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பால் அவர் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருமே குற்றவாளிகள்தான் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள னர். 21 வருடமாக நடைபெற்ற வழக்கில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை முக்கியம் என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக் காட்டியுள்ளது.
நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கியபோது, அதில் திமுக சதி இருப்பதாக விமர்சித்தார்கள். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக வினர் தாடி வைத்து, மொட்டை டித்துக்கொண்டனர். ஆனால் இப் போது அதே தீர்ப்பு உறுதி செய் யப்பட்டுள்ளதை அறிந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கு கின்றனர். அதிமுக இரண்டாக உடைந்து முதல்வர் பதவிக்கான போட்டியில் அனைவரும் உள்ள தால், நிலையான ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரும் என எதிர்பார்த்தால், அதற்கு முன்பாகவே சட்டப்பேரவைத் தேர்தல் வந்துவிடும் சூழல் உள் ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் சென் னைக்கு அழைக்கப்பட்டுள்ள தாக வெளியான தகவல் குறித்து ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில ளித்த ஸ்டாலின், ‘‘அப்படி கூட்டம் நடப்பதாக ஆதாரப்பூர்வமாக தகவல் வந்ததா?. அதுபோன்ற எந்தக் கூட்டத்தையும் நான் கூட்டவில்லை’’ என்றார்.
நன்றி : தி இந்து தமிழ்