சபரிமலை விமான நிலையத்துக்கு பூர்வாங்க அனுமதி
சபரிமலை அருகே கிரின்பீல்ட் விமான நிலையம் அமைப்பதற்கு கேரள அமைச்சரவை நேற்று பூர்வாங்க அனுமதி வழங்கியது.
இது தொடர்பாக கேரள அரசு சார்பில் நேற்று வெளியான செய்தியில், “சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்யுமாறு கேரள மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தை மாநில அமைச்சரவை கேட்டுக்கொண்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
சபரிமலையில் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மண்டல பூஜை, மகர விளக்கு சீசனில் பக்தர் களின் வருகை கடந்த சில ஆண்டு களாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அருகே எருமேலியில் விமான நிலையம் அமைக்க இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு திட்டமிட்டுள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் எருமேலி அமைந்துள்ளது. சபரிமலையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவிலும் இது உள்ளது.
நன்றி : தி இந்து தமிழ்