ஏர் இந்தியா தனியார் மயமாக்கும் திட்டத்தை நிறுத்திய பிரணாப்!- ஆர்டிஐ சட்டம் மூலம் தெரியவந்தது
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் திட்டத்தை இறுதி செய்திருந்தது. ஆனால் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இந்த திட்டத்தைக்கு எதிர்ப்பு தெரிவித் திருக்கிறார். தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் இந்த விஷயம் தற்போது தெரிய வந்தி ருக்கிறது.
கடந்த 2011-ம் ஆண்டு அக் டோபர் 28-ம் தேதி, அமைச்சர்கள் குழு ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் திட்டத்தை இறுதி செய்தனர். மூத்த அதி காரிகளின் பரிந்துரையின் அடிப் படையில் இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டது. ஆனால் பிரணாப் முகர்ஜி அந்த யோசனையை நிராகரித்தார். அப்போது நிறு வனத்தைச் சீரமைக்கும் பல பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட பிராணாப் தனியார்மயமாக்கலை நிராகரித்தார். வரும் 2021-ம் ஆண்டு வரை ரூ.30,231 கோடியை பங்கு முதலீடு செய்ய மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது. இது வரை ரூ.23,993 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
நன்றி : தி இந்து தமிழ்