‘காதி’ பெயர்கள் நீக்கம்: ஃபேப் இந்தியா அறிவிப்பு
ஃபேப் இந்தியா நிறுவனம் தனது பிராண்ட்களில் இருந்து காதி பெயரை விலக்கிக் கொண்டுள்ளது. பருத்தி துணிகள் விற்பனையை அதிகரிப்பதற்காக காதி என்கிற பெயரில் பிராண்டை இந்த நிறுவனம் பிரபலப்படுத்தி வந்தது. இந்த பெயரைப் பயன் படுத்துவது முறையற்ற வர்த்தக நடவடிக்கை எனவும், காதி பெயரை பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காதி கிராமத் தொழில்கள் வாரியம் (கேவிஐசி), ஃபேப் இந்தியா நிறுவனத்துக்கு நோட் டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தனது பிராண்டில் காதி பெயர் பயன்படுத்துவதை விலக்கிக் கொள்வதாக ஃபேப் இந்தியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
கேவிஐசி நோட்டீஸ்
காதி கிராமத் தொழில்கள் வாரியம் அனுப்பியுள்ள நோட் டீஸில், ஃபேப் இந்தியா நிறுவனம் தனது சில்லரை வர்த்தக கடைகளில் காதி என்கிற பெய ரிலான காட்சி பேனர்கள், தயாரிப்பு களில் குறிப்பிடுவதையும் உடனடி யாக அகற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
இந்த நோட்டீஸுக்கு, ஃபேப் இந்தியா நிறுவனம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது என்று தகவல் அறிந்த வர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஃபேப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் வினய் சிங் உடனடியாக செயல்பட்டு காதி பெயர்களை நீக்குவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கேவிஐசி நிறுவனத்தின் புகார்கள் குறித்து உடனடி யாக நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன என்றும், நோட் டீஸ் பெற்ற பிறகு எங்களது நிலைமைகள் குறித்து கேவிஐசி அதிகாரிகளிடம் விளக்கத் தயாராக உள்ளோம் என்றும் பேப் இந்தியா கூறியுள்ளது.
நன்றி : தி இந்து தமிழ்