Breaking News
தொகுதிக்கு செல்ல தயங்கும் சென்னை அதிமுக எம்எல்ஏக்கள்

சென்னை மாநகர், புறநகர் தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது தொகுதிகளுக்குச் செல்லாமல் சென்னையிலேயே தங்கியுள்ளனர்.

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசியலில் அசாதாரணமான சூழ்நிலை ஏற் பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர்களும், அதிமுக எம்எல் ஏக்களும் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் 10 நாட்களுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பரவை யில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தார். இதற்காக கூட்டப்பட்ட சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தில் பங்கேற்க கூவத்தூரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வென்ற தால் எம்எல்ஏக்கள் அனைவரும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத் தில் உள்ள எம்எல்ஏ விடுதியிலும், அமைச்சர்கள் இல்லத்திலும் தங்கினர். வாட்ஸ் அப், முக நூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அதிமுக எம்எல்ஏக் களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் எம்எல்ஏ வீடு, அலுவலகம் முற் றுகை என செய்திகள் வருவதால் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது தொகுதிகளுக்குச் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் ஆவடி, அம்பத் தூர், மதுரவாயல், பெரம்பூர், ராயபுரம், விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதில் கே.பாண்டியராஜன் (ஆவடி), ஆர்.நட்ராஜ் (மயிலாப்பூர்) ஆகியோர் ஓபிஎஸ் அணியில் உள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது தொகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகின்றனர். பாண்டியராஜனுக்கு ஆவடி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டி.ஜெயக்குமார் (ராயபுரம்), பி.பெஞ்சமின் (மதுரவாயல்) ஆகிய இருவரும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் தலைமைச் செயலகம், வீடு என பணிகளில் ஈடுபட்டுள்ளனரே தவிர, தொகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திக்கவில்லை.

வி.அலெக்சாண்டர் (அம்பத் தூர்), பி.வெற்றிவேல் (பெரம்பூர்), பி.சத்தியநாராயணன் (தியாக ராய நகர்), விருகை வி.என்.ரவி (விருகம்பாக்கம்) ஆகியோர் சென்னை மாநகரில் உள்ள தங்களது சொந்த இல்லம், எம்எல்ஏ விடுதி, தலைமைச் செயலகம், போயஸ் கார்டன், அமைச்சர்கள் இல்லம் என சென்று வந்து கொண்டிருக்கின்றனர். தொகுதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகங்களுக்கோ, தொகுதி யில் உள்ள பல்வேறு பகுதி களுக்கோ அவர்கள் இதுவரை செல்லவில்லை. மக்களின் எதிர்ப்பு காரணமாக எம்எல்ஏக்கள் தங்களது தொகுதிகளுக்குச் செல்ல தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.