நெட்டிசன் நோட்ஸ்: முதல்வர் முதல் கையெழுத்து- செய்வீர்களா?
தமிழக முதல்வராக முறைப்படி பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, மீனவர்களுக்கு வீடு உள்ளிட்ட 5 திட்டங்களில் கையெழுத்திட்டார். இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்…
Shan Karuppusamy
500 மதுக்கடைகளை மூடுவீங்க, சரிதான். எத்தனை கடைய திறப்பீங்கன்னு சொல்லலையே?
*
ஒரு மாநிலத்தின் முதல்வர், உச்சநீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் வழி நடப்போம் என்று சொல்கிறார். இத்தனை உண்மையான முதல்வரை நீங்கள் இதுவரை சந்தித்ததுண்டா?
Vini Sharpana
பள்ளிக்கு அருகிலேயே இருந்த எந்த உண்ணாமலைக்கடை டாஸ்மாக்கை மூடக்கோரி செல்போன் டவரில் ஏறி சசிபெருமாள் உயிர் நீத்தாரோ அந்தக்கடை ஜெயலலிதா முதல்வராகி முதல் கையெழுத்திட்டு மூடப்படும் என்று சொன்ன 500 கடைகளில் இல்லை. தற்போதும் 500 கடைகள் மூடப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளார். இந்த 500 கடைகளிலாவது உண்ணாமலைக்கடை டாஸ்மாக் வருகிறதா என்று பார்ப்போம்.
D S Gauthaman
ஆட்சியின் முதல் நாளிலேயே இலவச அறிவிப்புகளில் முதல்வர் கையெழுத்திடுவதை விட மக்களாகிய நம்முடைய தரத்திற்கு பெரிய சான்றிதழ் தேவையில்லை.
Ag Sivakumar
500 டாஸ்மாக் கடைகள் மூடல் – எடப்பாடியார் அறிவிப்பு.
‘ஏற்கனவே அம்மா ஒரு 500. இப்ப ஒரு 500. இந்த 1000 கடையோட அட்ரஸை எப்ப வெளிப்படையா அறிவிப்பீங்க?’
Kvppepsi Kvppepsi
செய்தி: பல்வேறு இலவச திட்டங்களில் இன்று கையெழுத்திட்டார் முதல்வர்.
மக்கள்: டேய் கைப்புள்ள உள்ளாட்சி தேர்தலுக்காகத்தான் எல்லாமும், ஏமாந்துறாத…
Tamil Elango
500 மதுகடைகளை மூட உத்தரவு. நல்லதொரு தொடக்கம் #EPS
Nelson Xavier
முதல்வர்கள் அறிவித்தது, உச்சநீதிமன்ற தீர்ப்பால் மூடப்பட்டது என இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால், இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக தெரிகிறது !
Guru Samy
இலவசம் வேண்டாம், ஏமாற வேண்டாம் மக்களே. ஏற்கனவே தமிழகத்தின் கடன் இரண்டரை லட்சம் கோடி.
Vinoth
முதல்வரின் முதல் நாள் #ஐந்து கோப்பு கையெழுத்து…!
500 மதுக்கடைகள் மூடல். – வருமானம் இல்லாத ஒயின் ஷாப்பை மூடிடுவாங்க.
மீனவர்களுக்கு 5000 தனி வீடுகள் 85 கோடி – நீங்களே எரிப்பீங்க; நீங்களே கட்டுவீங்க!
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஊதியம்- கடைசி வரை புது வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்னு சொல்ல மாட்டீங்க.
Gokul .K @gokulkesava
தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அதை எல்லாம் விட்டு விட்டு இலவசத் திட்டங்களுக்கு மட்டும் பெருமையாக கையெழுத்து இடுகிறார் முதல்வர்!
J Sindhu kumar skp @JskSindhu
தமிழகத்தில் உள்ள மதுத் தொழிற்சாலைகளை மூடவும் முதல்வர் கையெழுத்து போட வேண்டும்
சாய் பிரசாந்த்.. @saiprasanth_s
கையெழுத்து போடுறது முக்கியம் இல்ல முதல்வரே, அத செயல்படுத்திக் காட்டணும். செய்வீர்களா?
Arulmozhi Chelliah
எல்லாக் கோப்புகளையும் தெளிவாகப் படித்துவிட்டு கையெழுத்து போடுங்க முதல்வரே..ராஜினாமா கடிதத்தையும் இடையில் செருகியிருக்கப் போகிறார்கள்..
Joe Selva @joe_selva1
முதல்வர் முதல் கையெழுத்து 500 டாஸ்மார்க மூடல்.
மூடுறது மூடுறிங்க, 500 எதுக்கு 5000 கடைகளை மூடலாமே!
Paul Susheel
தமிழக விவசாயிகள் வேட்டி வாங்க வழியில்லாம இருக்காங்க …இதுல ஸ்கூட்டி தேவையா?
ரா புவன்
தேவையற்ற இலவசங்கள் மிகுந்த சிரமத்தைத்தான் ஏற்படுத்தும். மீண்டும் தமிழக பொருளாதாரச் சுமையை அதிகரிக்கும் அறிவிப்புகள்.
Viveka Vivek
ஹைவேஸ்ல இருக்கற கடையவே இன்னும் மூடல.
Bala Subramani
ஸ்கூட்டி வாங்க 50% மானியம்- #முதல்வரின் முதல் கையெழுத்து!
தமிழக மக்களுக்கு இப்போ தான் ரோசம் வர ஆரம்பித்தது. அதுக்குள்ள ஃபியூஸ் பிடுங்கியாச்சு.
Ezhumalai Venkatesan
மேலும் 500 அரசு மதுபானக் கடைகளை மூடுவது என்பது, பரிகாரம் தேடிக்கொள்வது. இந்த விஷயத்தில் சாதனை என்றால் அது பாமகவுக்கு மட்டுமே.. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையோர கடைகளை சட்டப்போராட்டத்தால் அகற்ற வைத்தவர்கள் அவர்கள். அப்படியே அகற்றவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால்தான் கடைகள் குறைப்பு என்ற வேரே துளிர்க்க ஆரம்பித்தது.
Venkatesh Rathakrishnan
இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதற்கான தேவை இவைதான்:
1. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும்.
2. ஜெயலலிதா இருந்தால்தான் மக்கள் நல, சமூகநலப் பணிகள் நடைபெறும் என்ற நிலையை மாற்றி, அதே பாதையைத்தான் பின்பற்றுகிறோம் என்று நிரூபிக்க வேண்டும்.
3. பொதுவான அதிருப்தியையும் முணுமுணுப்பையும் தடுக்கவேண்டும்.
இவையெல்லாவற்றையும் முதல்வர் செய்யலாம். ஆனால், இதற்குக் கிடைக்கும் பாராட்டோ, புகழோ, தனக்கானது என்று எங்கும் தப்பித்தவறி கூட உரிமை கொண்டாடிவிடக் கூடாது. அப்படி ஒன்றை நினைத்தே பார்க்கக் கூடாது. இவை அனைத்தையும் அம்மா, சின்னம்மாவின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்துவிட வேண்டும்.
இதற்கெல்லாம் செலவு செய்ய நம்மிடம் போதிய நிதிவசதி இருக்கிறதா என்ற நியாயமான கேள்வி? அது கெடக்கட்டும்!
நன்றி : தி இந்து தமிழ்