முதல் பந்தில் இருந்தே சுழலும் இப்படியொரு ஆடுகளத்தை பார்த்ததில்லை: ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிர்ச்சி
புனே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் பந்திலேயே சுழல் எடுபடும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இந்த தொடர் கடினமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்திய அணி சமீபகாலமாகவே சிறப்பாக விளையாடி வருகிறது. அதில் குறிப்பாக சொந்த மண்ணில் அருமையாக செயல்படுகிறது. எங்களது அணி இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு வலுவான ஆட்டத்தை கொடுக்கும்.
இந்த தொடரில் எங்களுக்கு இடர்கள் உள்ளன. ஹர்பஜன் சிங் நாங்கள் இந்த தொடரில் 4-0 என தோல்வியடைவோம் என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி உணரவில்லை. இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆட்டத்தை கொடுக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
சூழ்நிலையை தகவமைத்துக் கொண்டு திட்டங்களை களத்தில் எங்களது வீரர்கள் சரியாக செயல் படுத்துவதை பார்க்க நான் விரும்பு கிறேன். அவ்வாறு விளையாடும் போது கடினமான சூழ்நிலை களிலும் நாங்கள் நிச்சயம் போராடுவோம்.
கடினமான தருணங்களில் பதிலடி கொடுப்பதற்கான திறன்கள், திட்டங்கள், மனதள விலான திடம் எங்களிடம் உள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது. போட்டியின் முடிவை பற்றி நாங்கள் அதிகம் கவலை கொள்ளவில்லை. செயல்முறை பற்றிதான் அதிகம் கவலை கொண்டுள்ளோம்.
மேலும் புனே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. முதல் பந்திலேயே சுழல் எடுபடும் என நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இதுபோன்ற ஒரு ஆடுகளத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. வேகப்பந்து வீச்சாளர் களுக்கு ஏற்றம், இறக்கமாகவே இருக்கும்.
இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.
ஆடுகள படங்கள்
இதற்கிடையே சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்ரிகையில் புனே ஆடுகளத்தின் இரு படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆடுகளத்தில் உள்ள பிளவுகள் தெளிவாக தெரிகின்றன. வழக்க மாக ஆடுகளத்தை படம் எடுப் பதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால் ஆஸ்தி ரேலிய செய்தியாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து ஆடுகளத்தை பல்வேறு கோணங்களில் படம் எடுத்துள்ளனர்.
நன்றி : தி இந்து தமிழ்