ரூ.500, 1000 நோட்டுகளில் ரூ.5 லட்சம் டெபாசிட்: 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளக்கம் தர தேவையில்லை
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, 1000 நோட்டுகளில் ரூ.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்த 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளக்கம் தர தேவையில்லை என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. மேலும் 70 வயதுக்குட்பட்ட தனி நபர்கள் 2.5 லட்சத்துக்குள் டெபாசிட் செய்திருந்தால் அவர்கள் மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளப் படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சக மூத்த அதிகாரிகள், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8ம் தேதியிலிருந்து டிசம் பர் 30ம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் வருமான வரித்துறை யின் சோதனைகள் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினர். மேலும் ஒவ்வொரு வரையும் நாங்கள் ஆராயவில்லை. வருமான வரித்துறை மேற்கொள் ளும் சோதனை நடவடிக்கை எவ்வளவு பணம் டெபாசிட் செய் யப்பட்டுள்ளது என்பதற்கான விசாரணைதான். இதைக் கொண்டு வருமானம் கணக்கிடுவதற்காக அல்ல என்றும் கூறினர்.
இந்த சரிபார்ப்பு ஆன்லைனில் முடிந்துவிட்டது என்றும் அதிகாரி கள் குறிப்பிட்டனர். மேலும் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை டெபாசிட் செய்திருந்தால் வருமான வரித்துறையின் இணையதளத் துக்குச் சென்று அந்த பணத்துக் கான விளக்கத்தை அளிக்கலாம் என்றும் கூறினர்.
டெபாசிட் செய்துள்ள தொகை முந்தைய வருமான வரி தாக்கல் கணக்குடன் பொருந்தினால் சரி பார்ப்பு அத்தோடு முடிந்து விடும். டெபாசிட் செய்துள்ள தொகைக் கான வருமான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் அதற்கான விளக்கம் கோரப்படும்.
70 வயதுக்குட்பட்டவர்கள் 2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்திருந்தால், அல்லது 70 வய துக்கு மேற்பட்டவர்கள் 5 லட்சத் துக்கு மேல் டெபாசிட் செய்திருந் தால் அதற்கான வருமான ஆதா ரத்தை, குறிப்பாக வீட்டு சேமிப்பு, பழைய வருமானத்திலிருந்து சேமிப்பு, தொழில் மூலம் வந்த வருமானம் இல்லை என்பதற்காக ஆதாரம் போன்றவற்றை அளிக்க வேண்டும்.
இதற்கு வருமான வரித்துறை எந்த நோட்டீஸும் அனுப்பாது. இது சரிபார்ப்பு நடவடிக்கை மட் டுமே. மூன்றாம் நபரைக் கொண்டு சரிபார்ப்புகள் இருக்காது. ஆன் லைன் மூலர் சரிபார்க்கும் முயற்சி என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். அடையாளம் காணப்படும் நபர்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப் பப்படும். வருமான வரித்துறை இணையதளத்தில் பதிவு செய் யாதவர்கள் உடனடியாக பதிவு செய்யவும் என்றும் கூறினர்.
பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்திருந்த தொகை ரூ.10 லட்சம் கோடியாகும். அதில் ரூ.4.5 லட்சம் கோடி சரிபார்க்க வேண்டியுள்ளது.
இதற்கான முதற்கட்ட நடவடிக் கைக்கு ‘ஆபரேஷன் கிளீன் மணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்டிருந்த 50 நாட்களில் ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்துள்ள 18 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதில் 7 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விவரங்களை அளித்துள்ளனர்.
இதன் திட்டத்தின் அடுத்த கட்ட சரிபார்ப்பு நடவடிக்கைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். இதற்காக வருமான வரித்தாக்கல் தகவல்கள், வங்கி பரிவர்த்தனை குறித்து வங்கிகள் அளிக்கும் தவல்களை சோதிக்கும் பணிகளை வருமான வரித்துறை மேற்கொண்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நன்றி : தி இந்து தமிழ்