வெளிநாட்டு பயணிகளின் இந்தியா வருகை 11% அதிகரிப்பு
2016 ம் ஆண்டில் மட்டும் 89 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 2015ம் ஆண்டை காட்டிலும் 11 சதவீதம் அதிகம்.
11 சதவிகிதம் அதிகம்
இந்தியாவில் சமீப காலமாக வெளிநாட்டு பயணிகள் அதிகம் வரத் தொடங்கி உள்ளனர். கடந்த 2015 ம் ஆண்டைக் காட்டிலும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக இக்ஸிகோ டிராவல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, பங்களாதேஷ், பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து அதிக அளவில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்க காரணம்:
மத்திய அரசின் தாராள கொள்கைகள், வெளிநாட்டுப் பயணிகளுக்கு இ-விசாக்கள் எளிதாக கிடைப்பது மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை வசதி மற்றும் ரயில் போக்குவரத்து போன்றவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
இவர்கள் பெரும்பாலும் கோவா, ராஜஸ்தான், தமிழக கோயில்கள், கேரள மாநிலம், முக்கிய மலை வாழிடங்கள் போன்ற இடங்களுக்கு விரும்பி வருகிறார்கள் என தெரிய வந்துள்ளது. மத்திய அரசு தாராள கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், சுற்றுலா பயணிகளின் வருகை வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
நன்றி : தினமலர்